அதிர்ச்சி... தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி!

அதிர்ச்சி... தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி!

திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டுப் பணிப்பெண் லட்சுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஏற்கென்வே தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பெயர் இயக்நர் அமீர் விவகாரத்தில் சர்ச்சையான நிலையில், இந்த விஷயம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'பருத்திவீரன்’, ‘பத்துதல’, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ போன்ற திரைப்படங்களைத் தயாரித்தவர் திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இவர் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’, விக்ரமின் ‘தங்கலான்’ படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம்14ம் தேதி இவரது வீட்டில் தங்க நகைகள் திருடு போயுள்ளது. இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த காவல்துறை, ஞானவேல் ராஜா வீட்டுப் பணிப்பெண் லட்சுமியிடம் விசாரணை நடத்தியது.

இதனையடுத்து, விசாரணைக்கு இன்று மீண்டும் ஆஜராக லட்சுமிக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. காவல்துறையின் அடுத்தடுத்த விசாரணை காரணமாக லட்சுமி மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனால், இன்று அவர் வீட்டில் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். லட்சுமியை மீட்ட அவரது உறவினர்கள் சென்னை, இராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை, தி.நகரில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இவரது மனைவி மேகா ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மனைவி மேகாவின் தங்கப் பரிசுப் பொருட்கள் காணாமல் போனது தொடர்பாக மேலாளர் தினேஷ் என்பவர் மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அந்தப் புகாரில் தங்கள் வீட்டில் கடந்த நான்கு வருடங்களாக வேலை பார்த்து வரும் பணிப்பெண் லட்சுமி மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்த நிலையில், இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

ராகுல் காந்தியின் ஆண்மையை பரிசோதிக்க தாய், மகள்களை அவருடன் தூங்க அனுப்புங்கள்... காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை பேச்சு!

கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அதிர்ச்சி... ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரியின் மண்டை உடைப்பு: சென்னையில் பரபரப்பு!

நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நாட்டின் கவனம் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள் இவைதான்!

முன்பு முதலை, இப்போது சிறுத்தை... படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in