நடிகர் விஜய்யின் 'வாரிசு’ படப்பிடிப்பு நடத்த திடீர் எதிர்ப்பு: காரணம் என்ன?

நடிகர் விஜய்யின் 'வாரிசு’ படப்பிடிப்பு நடத்த திடீர் எதிர்ப்பு: காரணம் என்ன?

விஜய் நடிக்கும் ’வாரிசு’ படத்தின் ஷூட்டிங்கிற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

வம்சி பைடிபள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். விஜய் ஜோடியாக, ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா உட்பட பலர் நடிக்கின்றனர்.

குடும்பக் கதையைக் கொண்ட படம் என்பதால் பெரும் நட்சத்திரப் பட்டாளம் இந்தப் படத்தில் இணைந்துள்ளது. தமன் இசை அமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் மாறி மாறி நடந்து வருகிறது.

இதன் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கி இருக்கிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது.

இந்நிலையில், தெலுங்கு தயாரிப்பாளர்கள், படப்பிடிப்புகளை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நிறுத்தியுள்ளனர். ஹீரோக்களின் சம்பளம், படப்பிடிப்பு செலவுகள் அதிகரிப்பு உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசி முடிவெடுத்தப் பிறகே, ஷூட்டிங் தொடரவும் அதுவரை நிறுத்தி வைக்கவும் முடிவு செய்துள்ளனர். ஆனால், விஜய் நடிக்கும் ’வாரிசு’ படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடந்து வருவதற்கு சில தெலுங்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கு தயாரிப்பாளர் தில் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தையும் தயாரிக்கும் அவர், அந்தப் படத்தின் ஷூட்டிங்கை நிறுத்தி விட்டார். அது தெலுங்கு படம் என்றும் ’வாரிசு’ தமிழ்ப் படம் என்பதால் அதன் ஷூட்டிங் தொடர்கிறது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in