ஹீரோவை மாற்றச் சொல்லி மிரட்டல்: ஹீரோயின் மீது தயாரிப்பாளர் புகார்

ஹீரோவை மாற்றச் சொல்லி மிரட்டல்: ஹீரோயின் மீது தயாரிப்பாளர் புகார்

ஹீரோவை மாற்றினால்தான் நடிப்பேன் என்று ஹீரோயின் மிரட்டியதாக தயாரிப்பாளர் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மி கவுதம். இவர் தமிழில், சாந்தனு, சந்தானம் நடித்த 'கண்டேன்' படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இப்போது தெலுங்கு படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வரும் ராஷ்மி, பாலாஜி நாகலிங்கம் தயாரிக்கும், 'ராணி காரி பங்களா' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் தயாரிப்பாளர் தன்னை மிரட்டியதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் ராஷ்மி கூறியிருந்தார்.

இதுபற்றி அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பாலாஜி நாகலிங்கம் கூறியிருப்பதாவது:

பாலாஜி நாகலிங்கம், ராஷ்மி கவுதம்
பாலாஜி நாகலிங்கம், ராஷ்மி கவுதம்

பொதுவாக நான் மற்றவர்களைத் திட்டுவதில்லை. என் கோபத்தைக் கட்டுப்படுத்தும் திறன் என்னிடம் இருக்கிறது. ஆனால், நான் ராஷ்மியை ஏன் திட்டினேன்? 'ராணி காரி பங்களா' படத்தில் நடிக்க ராஷ்மி சம்மதம் தெரிவித்ததும் ஒரு சம்பளம் பேசினோம். ஒப்புக்கொண்டார். படம் பெரும்பாலும் முடிந்துவிட்டது. இந்த நேரத்தில்தான் ராஷ்மி, வம்பை இழுத்தார். திடீரென ஹீரோவை மாற்றச் சொன்னார். அதிர்ச்சியாக இருந்தது. பாதி படம் முடிந்த நிலையில் ஹீரோவை மாற்றினால் நஷ்டம் வரும் என்று தெரியாதா?

அவரிடம் பேச முயன்றேன். ’எனக்கு நாகபாபுவை (சிரஞ்சீவியின் சகோதரர்) தெரியும், ஷ்யாம் பிரசாத் ரெட்டியைத் தெரியும்’ என்று மிரட்டினார். நானும் இந்தத் துறையில் பல வருடங்களாக இருக்கிறேன். எனக்கும் அவர்களைத் தெரியும் என்றேன். ராஷ்மி பேசியதன் பதிவு என்னிடம் இருக்கிறது. அப்போது ஒரு கட்டத்தில் கோபம் அதிகமாக, பிலிம்சேம்பர் வாயிலில் உன்னைக் கட்டி வைத்துவிடுவேன், நேர்மையாக நடந்துகொள் என்றேன். என் வயதென்ன, அவர் வயதென்ன? முதலில், பேசிய சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டுவிட்டு, கடைசிகட்டத்தில் சங்கடப்படுத்திவிட்டார். இதனால் மூன்று மாதங்கள் படம் கிடப்பில் கிடந்தது. இறுதியில் ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்தார். இதுதான் நடந்தது. நான் ஸ்ரீதேவி, ராதா போன்றோரை வைத்து படம் தயாரித்தவன்.

இவ்வாறு பாலாஜி நாகலிங்கம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.