படப்பிடிப்பில் தீபிகாவுக்கு நடந்தது என்ன?- தயாரிப்பாளர் விளக்கம்

படப்பிடிப்பில் தீபிகாவுக்கு நடந்தது என்ன?- தயாரிப்பாளர் விளக்கம்

படப்பிடிப்பில், நடிகை தீபிகா படுகோனுக்கு நடந்தது என்ன என்பது குறித்து தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தி நடிகை தீபிகா படுகோன். இவர் ’நடிகையர் திலகம்’ நாக் அஸ்வின் இயக்கும் ’புராஜக்ட் கே’ படத்தில் இப்போது நடித்து வருகிறார். பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

இதில் கலந்துகொண்ட நடிகை தீபிகா படுகோனுக்கு இரண்டு நாட்களுக்கு முன், உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருடையை இதய துடிப்பு திடீரென அதிகரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு மணி நேரத்துக்குப் பின் அவர் இதய துடிப்பு சீரானதை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

தீபிகா, அஸ்வினி தத்
தீபிகா, அஸ்வினி தத்

இந்நிலையில், தீபிகாவின் உடல்நிலை காரணமாக படப்பிடிப்பை நடிகர் பிரபாஸ் நிறுத்திவிட்டதாகச் செய்திகள் வெளியாயின. இதுபற்றி தயாரிப்பாளர் அஸ்வினி தத் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ``ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக தீபிகா படுகோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல் நிலை இப்போது நன்றாக இருக்கிறது. அமிதாப்பச்சன் - தீபிகா நடிக்கும் காட்சிகள் இப்போது படமாகி வருகிறது. படப்பிடிப்பு நிறுத்தப்படவில்லை. திட்டமிட்டபடியே எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது`` என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in