குஜராத்தி படத்தை தயாரிக்கிறார்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி

குஜராத்தி படத்தை தயாரிக்கிறார்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி

நடிகை நயன்தாராவும், அவரது காதலர் விக்னேஷ் சிவனும் இணைந்து படம் ஒன்றை தயாரிக்க உள்ளனர்.

நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் சில ஆண்டுகளாக காதலர்களாக இருந்து வருகிறார்கள். இவர்களின் திருமணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தற்போது நயன்தாரா பிசியாக நடித்து இருந்து வருகிறார். விக்னேஷ் சிவனும் படங்களை இயங்கி வருகிறார்.

இந்நிலையில், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து குஜராத்தி படம் ஒன்றை தயாரிக்க உள்ளனர். தேசிய விருது வாங்கிய மனிஷ் சைனி இயக்கும் புதிய படத்தில், இயக்குநர் மல்ஹர் தக்கார் மற்றும் மோனல் காஜர் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். 'சுப் யாத்ரா' என்ற பெயரில் வெளியாக உள்ள படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த தகவலை தனது சமூகவலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் விக்னேஷ் சிவன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in