சசிகுமார் படத் தலைப்புக்கு சிக்கல்?

 ’காமன்மேன்’
’காமன்மேன்’

சசிகுமார் நடிக்கும் படத்தின் தலைப்பு வேறொரு நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளதால், அவர் படத்தின் தலைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சத்ய சிவா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம், ’காமன்மேன்’. செந்தூர் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஹரிப்பிரியா நாயகியாக நடிக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில் சசிகுமாருக்கு வில்லனாக, விக்ராந்த் நடிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் தலைப்புக்குத் தொடக்கத்திலேயே எதிர்ப்புக் கிளம்பியது.

சசிகுமார்
சசிகுமார்

ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் என்ற நிறுவனம், அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்த் சார்பில், 2018-ம் வருடமே ‘காமன்மேன்’ தலைப்பை பிலிம் சேம்பரில் பதிவு செய்துள்ளதாகவும், அது தொடர்பான அனைத்து ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தது.

இதுபற்றி நடிகர் சசிகுமார், பிலிம் சேம்பர் மூலமாக தலைப்பு பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினாராம். இதையடுத்து பிலிம் சேம்பரிடம், ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. பிலிம் சேம்பர், தயாரிப்பாளர் சங்கத்திடம் விளக்கம் கேட்டது. அங்கிருந்து முறையான பதில் வராததால், தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம் என்று பிலிம் சேம்பர் தெரிவித்துள்ளது.

காமன்மேன் - சசிகுமார்
காமன்மேன் - சசிகுமார்

இதையடுத்து ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ், ‘காமன்மேன்’ என்ற தலைப்பு தங்களுக்கே சொந்தம் என்றும் இந்த தலைப்பில் வேறு எந்த நிறுவனத்தின் படத்துக்கும் அனுமதி சான்று வழங்கக் கூடாது என்று சென்சார் போர்டுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அதை ஏற்றுக்கொண்ட சென்சார் போர்டு, ‘காமன்மேன்’ தலைப்பை ஏஜிஆர் நிறுவனத்துக்கு வழங்கியது. இதனால் சசிகுமார் பட தலைப்புக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in