நயன்தாரா நடித்த 'கனெக்ட்' படத்திற்கு சிக்கலா?: இயக்குநர் விக்னேஷ்சிவன் பதில்

நயன்தாரா நடித்த 'கனெக்ட்' படத்திற்கு சிக்கலா?: இயக்குநர் விக்னேஷ்சிவன் பதில்

நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்திற்கு சிக்கல் வந்துள்ளதா என்ற கேள்விக்கு விக்னேஷ்சிவன் பதில் கூறியுள்ளார்.

அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, வினய், சத்யராஜ் உள்பட பலர் ‘கனெக்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் இம்மாதம் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் இடைவேளை இல்லாமல் வெளியாக இருக்கிறது. இதனால், இடைவேளையில் திரையரங்குகளில் கேண்டீன் வியாபாரம் பாதிக்கப்படும் என திரையரங்க உரிமையாளர்கள் படத்தைத் திரையிட எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ‘கனெக்ட்’ திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நேற்று நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ்சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கலந்து கொண்டனர். இதில் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு விக்னேஷ்சிவன் பதிலளித்தார்.

அதில், ‘கனெக்ட்’ படத் திரையிடலுக்கு சிக்கல் எழுந்தததா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ‘இடைவேளை இல்லாமல் இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘கனெக்ட்’. 300க்கும் அதிகமான திரையரங்குகள் கிடைத்திருக்கிறது. திரையரங்க உரிமையாளர்களிடம் இடைவேளை இல்லை என்பது குறித்து முன்பே சொல்லிதான் அனுமதி வாங்கி இருந்தோம். சிலர் மட்டும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு மட்டும் இடைவேளை என்பதை சொல்லி இருக்கிறோம். மற்றபடி படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை’ என விக்னேஷ்சிவன் தெரிவித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in