ஜெயம் ரவி ஜோடியாகிறாரா சூர்யா பட நாயகி?

ஜெயம் ரவி ஜோடியாகிறாரா சூர்யா பட நாயகி?

மணிரத்னம் இயக்கும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம் ரவி, அடுத்து ‘பூலோகம்’ இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் ‘அகிலன்’ படத்தில் நடித்து வருகிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார். இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பிரியங்கா மோகன்
பிரியங்கா மோகன்

தற்போது அகமது இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இதில் அவர் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதையடுத்து ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் படத்தை ராஜேஷ். எம் இயக்கிறார். இவர், ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’ஆல் இன் ஆல் அழகுராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

பிரியங்கா மோகன்
பிரியங்கா மோகன்

இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக, பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ’டாக்டர்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான பிரியங்கா மோகன், சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’படத்தில் நடித்தார். சிவகார்த்திகேயனின் ’டான்’ படத்தில் நடித்துள்ள அவர், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திலும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.