
டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியங்கா மோகன், தொடர்ந்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், சிவகார்த்திகேயனுடன் டான் என அடுத்தடுத்து நடித்து ரசிகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றுள்ளார். தற்போது தனுஷூடன் கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் பிரியங்கா மோகன்.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் மற்றும் குடும்பத்தினருடன் நடிகை பிரியங்கா மோகன், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி ஆகியோரும் லண்டன் சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, ரசிகர்களிடையே பரவி வருகின்றன.
ஏற்கெனவே, இதே கூட்டணி துபாய்க்கு சுற்றுலா சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.