வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்

வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்றுள்ளதாக பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ரா, தமிழில் விஜய்யுடன் நடித்த ’தமிழன்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் பாலிவுட் சென்ற அவர், அங்கு முன்னணி நடிகை ஆனார். இதையடுத்து ஹாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், தன்னை விட 10 வயது குறைந்த பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸை காதலித்து வந்தார். இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.

இந்நிலையில், வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுகொண்டதாக பிரியங்கா - நிக் ஜோனஸ் தம்பதி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘‘நாங்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தையை வரவேற்றுள்ளோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்தச் சிறப்பான நேரத்தில், நாங்கள் எங்கள் குடும்பம் குறித்து கவனம் செலுத்துவதால் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டுகிறோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர்களுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in