தெலுங்கில் டாப் ஹீரோ ஜோடியாகிறார் பிரியங்கா மோகன்!

தெலுங்கில் டாப் ஹீரோ ஜோடியாகிறார் பிரியங்கா மோகன்!

தெலுங்கில் முன்னணி ஹீரோ ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.

பிரபல தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபு. இவர் நடித்து சமீபத்தில் வெளியான ’சர்க்காரு வாரி பாட்டா’ படம் வரவேற்பைப் பெற்றது. இதில் அவர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். பரசுராம் இயக்கிய இந்தப் படத்துக்குப் பிறகு த்ரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடிக்கிறார் மகேஷ்பாபு.

த்ரிவிக்ரமும் மகேஷ்பாபுவும், அத்தடு மற்றும் கலீஜா படங்களில் ஏற்கெனவே இணைந்தனர். இப்போது மீண்டும் இணைவதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இதில் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசி வருகின்றனர்.

இதற்கிடையே இந்தப் படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பிரியங்கா, தெலுங்கில் நானியுடன் கேங்க் லீடர், சர்வானந்துடன் ஸ்ரீகாரம் படங்களில் நடித்துள்ளார்.

பிறகு தமிழுக்கு வந்த அவர், டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் படங்களில் நடித்தார். இப்போது மகேஷ்பாபு படம் மூலம் தெலுங்குக்கு மீண்டும் செல்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in