'ஒல்லியாகவும், வெள்ளைத் தோலுடனும்’ - தமிழ் கதாநாயகிகளின் நெருக்கடி குறித்து ப்ரியாமணி வேதனை

'ஒல்லியாகவும், வெள்ளைத் தோலுடனும்’ - தமிழ் கதாநாயகிகளின் நெருக்கடி குறித்து ப்ரியாமணி வேதனை

சினிமாவில் எப்படி ஒரு கதாநாயகன் நிலைத்து நிற்க எழுதப்படாத சில வரையறைகள் இருக்கிறதோ அதுபோலவே, கதாநாயகிகளுக்கும் பல எழுதப்படாத விதிகள் சினிமாவில் இருக்கின்றன. அப்படி, தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் எப்படி வெள்ளைத் தோலுக்கும், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டார்கள், இப்போது நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து 'பருத்திவீரன்' புகழ் நடிகை ப்ரியாமணி தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதில் கூறியிருப்பதாவது, "நான் சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்பக் காலத்தில் எனக்குத் தமிழில் சவாலாக இருந்த படங்கள் 'பருத்தி வீரன்', 'சாருலதா' மற்றும் மலையாளத்தில் ஒரு படம் என இவை மூன்றையும் சொல்வேன். சினிமாவில் வெள்ளையாகவும், ஒல்லியாகவும் தான் கதாநாயகி இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. முன்பெல்லாம் இவை எதுவும் இல்லாமல் அவர்கள் வழியிலேயே ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால், பாலிவுட் கதாநாயகிகளைத் தமிழ் திரையுலகம் பார்த்ததிலிருந்து வெள்ளையாக இருக்க வேண்டும், குறிப்பாக உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது தமிழ் சினிமாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக தலைதூக்கத் தொடங்கியது.

மும்பையில் பொதுவாகவே கதாநாயகிகள் என்றில்லாமல் எல்லோருக்குமே அங்கு உடல்வாகும், நிறமும் இயற்கையாகவே அப்படியே இருக்கும். ஆனால், தமிழகத்தில் அப்படி கிடையாது. அதைப் புரிந்து கொள்ளாமல் அந்த நெருக்கடி நிலைக்குத் தமிழ்த் திரைப்பட கதாநாயகிகள் தள்ளப்பட்டார்கள். ஆனால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். வடக்கிலும் நமது நிறத்தை விரும்புகிறார்கள். நமது திறமையை மதிக்கிறார்கள். பாலிவுட் தாண்டி ஹாலிவுட்டிலும் கூட நிறையக் கதாபாத்திரங்கள் இந்தியர்களாகவே நம்முடைய நடிகர்கள் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்ற வகையில் சந்தோஷம்" என்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in