`புஷ்பா 2’ படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக நடிக்கும் பிரபல நடிகை?

`புஷ்பா 2’ படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக நடிக்கும் பிரபல நடிகை?

’புஷ்பா 2 படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக பிரபல நடிகை நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ’புஷ்பா’. இந்தப் படத்தை சுகுமார் இயக்கி இருந்தார். ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீவள்ளி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். மலையாள நடிகர் பஹத் ஃபாசில், கன்னட நடிகர் தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ், மைம் கோபி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். அவர் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. நடிகை சமந்தா, ’ஊ சொல்றியா மாமா’ என்ற குத்துப்பாடலுக்கு ஆடியிருந்தார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்தப் படம் தெலுங்கு தவிர, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளி்லும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் அடுத்த பாகம் விரைவில் தொடங்க இருக்கிறது. முதல் பாகம் வசூலில் மிரட்டியிருப்பதால் அடுத்தப் பாகத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளனர்.

'புஷ்பா 2' படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் நடிகை பிரியாமணியும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் விஜய் சேதுபதியின் மனைவியாக நடிக்க இருக்கிறார் என்கிறார்கள். இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in