இயக்குநர் பிரியதர்ஷனுக்குக் கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி!

இயக்குநர் பிரியதர்ஷனுக்குக் கரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி!
இயக்குநர் பிரியதர்ஷன்

பிரபல இயக்குநர் பிரியதர்ஷனுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு பிரியதர்ஷனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மலையாளம், தமிழ், இந்தி என வெவ்வேறு மொழிகளில் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கும் இயக்குநர் பிரியதர்ஷன், சமீபத்தில் மோகன்லால் நடிப்பில், ‘மரக்கார்: லயன் ஆஃப் தி அரேபியன் ஸீ’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். தமிழில், இப்படம் ‘மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’ எனும் தலைப்பில் வெளியாகி கலவையான வரவேற்பைப் பெற்றது. இவரது மகள் கல்யாணி பிரியதர்ஷன் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமாகி, ‘மாநாடு’, ‘புத்தம்புது காலை’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இயக்குநர் பிரியதர்ஷன் கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு விரைவில் நலம்பெற ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

Related Stories

No stories found.