'டிமான்டி காலனி 2’: அருள்நிதி ஜோடியாகிறார் பிரியா பவானி சங்கர்!

'டிமான்டி காலனி 2’: அருள்நிதி ஜோடியாகிறார் பிரியா பவானி சங்கர்!

’டிமான்டி காலனி 2’ படத்தில் அருள்நிதி ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நாயகனாக நடித்த படம் ’டிமான்டி காலனி’. இதில், ரமேஷ் திலக், சனத், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி உட்பட பலர் நடித்திருந்தனர். 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஆனார் அஜய் ஞானமுத்து.

இந்தப் படம் வெளியாகி ஏழு வருடம் ஆன நிலையில், இப்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தை, அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கி வேணுகோபால் இயக்குகிறார். இதன் கதையை எழுதியுள்ள அஜய் ஞானமுத்து படத்தைத் தயாரிக்கிறார். முதல் பாகத்துக்கும் இந்தப் படத்துக்கும் சம்மந்தமில்லை.

அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார். இருவரும் ஏற்கனவே ’களத்தில் சந்திப்போம்’ படத்தில் நடித்திருந்தனர். இப்போது மீண்டும் இணைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in