வெப்சீரிஸில் இணைந்த பிரியா பவானி, பார்வதி

வெப்சீரிஸில் இணைந்த பிரியா பவானி, பார்வதி
பிரியா பவானி சங்கர்

வெப் தொடர் ஒன்றில் பிரியா பவானி சங்கர், பார்வதி இணைந்து நடிக்கின்றனர். வெப் தொடர்களில் நடிக்க, நடிகர், நடிகைகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நடிகை சமந்தா, ‘ஃபேமிலிமேன் 2’ தொடரில் நடித்தது அதிக வரவேற்பைப் பெற்றது. அவருக்கு இந்தி வாய்ப்புகளையும் பெற்று தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் தமிழ், வெப் தொடரில் நடித்தனர். ஸ்ருதி ஹாசன், பிரியாமணி, ராஷி கன்னா உள்ளிட்ட பலரும் வெப் தொடரில் நடிக்க கவனம் செலுத்தி வருகின்றனர்.

விக்ரம் குமார், பார்வதி, பிரியா பவானி சங்கர், நாக சைதன்யா
விக்ரம் குமார், பார்வதி, பிரியா பவானி சங்கர், நாக சைதன்யா

இந்நிலையில், பிரியா பவானி சங்கரும் பூ பார்வதியும் வெப் தொடர் ஒன்றில் நடிக்கின்றனர். தூதா (Dootha) என்ற இந்த ஹாரார் த்ரில்லர் தொடரை தமிழில், ’யாவரும் நலம்’, சூர்யா நடித்த ’24’ படங்களை இயக்கிய இயக்குநர் விக்ரம் குமார் இயக்குகிறார். நாக சைதன்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரியா பவானி, ஏற்கெனவே, ‘டைம் என்ன பாஸ்’ என்ற வெப் தொடரில் நடித்திருந்தார்.

தெலுங்கில் உருவாகும் தூதா தொடர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் வெளியாகும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in