`வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கணும்; என்னுடைய இன்ஸ்பயர் தனுஷ்'

ரசிகர்களின் கேள்விக்கு நடிகை ப்ரியா பவானி ஷங்கர் `நச்' பதில்
`வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கணும்; என்னுடைய இன்ஸ்பயர் தனுஷ்'

சமூக வலைதளத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நடிகை ப்ரியா பவானி ஷங்கர் `நச்' என்று பதில் அளித்துள்ளார்.

‘மேயாத மான்’ படம் மூலமாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகை ப்ரியா பவானி ‘மான்ஸ்டர்’, ‘ஓ மணப்பெண்ணே’ என அடுத்தடுத்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். ‘பொம்மை’, ‘ஹாஸ்டல்’ என அடுத்தடுத்த படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார் ப்ரியா பவானி ஷங்கர்.

மேலும், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவது தவறாக பேசுபவர்களுக்கு தக்க பதிலடி, அரசியல் பதிவுகள் என ப்ரியாவின் சமூக வலைதள பதிவுகள் எப்போதுமே ரசிகர்களிடம் கவனத்தை பெற கூடிய ஒன்று. அந்த வகையில் தற்போது ரசிகர்களுடன் உரையாடி உள்ளார் ப்ரியா. அதில் சில சுவாரசியமான கேள்வி பதில்களை பார்க்கலாம்.

ரசிகர்: எந்த இயக்குநருடன் இணைந்து வேலை பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்?

ப்ரியா: கண்டிப்பாக வெற்றிமாறன் சாருடன்தான். வெற்றிமாறன் பட உலகத்துக்குள் நான் இருக்க வேண்டும். அங்கு அந்த உலகத்துக்குள் நான் எப்படி உணர்கிறேன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ரசிகர்: எந்த நடிகர் உங்களை இன்ஸ்பயர் செய்துள்ளார்?

ப்ரியா: தனுஷ்! அவருடைய சினிமா கரியரில் அவருடைய வளர்ச்சி மற்றும் அவரை சுற்றியுள்ளவர்களின் வளர்ச்சிக்காக அவர் செய்திருப்பது மிக பெரிய விஷயம். அது அவ்வளவு எளிதானது அல்ல.

ரசிகர்: நீங்கள் மேக்கப் இல்லாமல் எதாவது ஒரு படம் நடித்திருக்கிறீர்களா?

ப்ரியா: நிச்சயமாக! இந்த மாதம் 28-ம் தேதி வெளியாகவுள்ள ‘ஹாஸ்டல்’ திரைப்படத்தில் நான் மேக்கப் இல்லாமல் தான் நடித்துள்ளேன். ஒரு உண்மையை சொல்லவா? நான் இதுவரை நடித்துள்ள 80 சதவீத படங்களில் மேக்கப் இல்லாமல் தான் நடித்திருக்கிறேன். பயப்படாமல் பாருங்கள்.

ரசிகர்: நீண்ட நாட்களாக ஒருவருடன் லாங் ரிலேஷன்ஷிப் என்பது அயர்ச்சியாக இல்லையா?

ப்ரியா: எந்த ஒரு உறவும் நீண்ட காலம் இணைந்திருந்தால் நிச்சயம் அயர்ச்சி இருக்கதான் செய்யும். இது மட்டுமல்லாமல், சில சமயங்களில் காதல் என்பது உணர்வாக இல்லாமல், கமிட்மென்ட்டாககூட தோன்றும். இது எப்போதுமே சிரிப்பு, புன்னகை மற்றும் மகிழ்ச்சி என இருப்பதில்லை. உங்களை விட்டு விலகும் நிலையும் இருக்கும். உறவில் மகிழ்ச்சி, நிம்மதி என்பதை தக்க வைத்து கொள்ள வேண்டும்.

மேலும் தன்னுடைய உள்ளாடை குறித்து கேள்வி கேட்ட ஒருவருக்கு பதிலளித்துள்ள ப்ரியா, அதுவும் உடலின் ஒரு உறுப்புதான். நான் வேறு ஒரு கிரகத்தில் இருந்து குதித்து வரவில்லை. இது போன்ற இழிவான கேள்விகளை கேட்பதால் உங்களது கீழ்த்தரமான முகத்தை தான் அம்பலப்படுத்துகிறீர்கள் எனவும் அதிரடியாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.