பிரம்மாண்ட பான் இந்தியா படத்தை இயக்குகிறார் பிருத்விராஜ்

பிரம்மாண்ட பான் இந்தியா படத்தை இயக்குகிறார் பிருத்விராஜ்

பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ். இவர் தமிழில் ‘கனா கண்டேன்’, ‘மொழி’, ‘சத்தம் போடாதே’, ‘வெள்ளித்திரை’, ‘அபியும் நானும்’, ‘காவியத் தலைவன்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் மோகன் லால், மஞ்சுவாரியர் நடிப்பில் ‘லூசிஃபர்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

இதையடுத்து ‘ப்ரோ டாடி’ என்ற படத்தை இயக்கினார். இதுவும் வரவேற்பைப் பெற்றது. இப்போது ‘எம்புரான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர் ’டைசன்’ என்ற படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். இதன் கதையை ‘லூசிஃபர்’ படத்தின் திரைக்கதையை எழுதிய முரளி கோபி எழுதியுள்ளார்.

இந்தப் படத்தை ‘கே.ஜி.எஃப்’ படங்களை பிரம்மாண்டமாகத் தயாரித்த ஹோம்பலே நிறுவனம் தயாரிக்கிறது. பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

பிரம்மாண்ட வெற்றி பெற்ற, ‘கே.ஜி.எஃப்2’ படத்தை பிருத்விராஜ்தான் கேரளாவில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in