தமிழில் ஏன் தொடர்ந்து நடிக்கவில்லை?- பிருத்விராஜ் விளக்கம்

தமிழில் ஏன் தொடர்ந்து நடிக்கவில்லை?- பிருத்விராஜ் விளக்கம்

தமிழில் ஏன் தொடர்ந்து நடிக்கவில்லை என்பதற்கு நடிகர் பிருத்விராஜ் விளக்கம் அளித்தார்.

பிருத்விராஜ், விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன், அர்ஜுன் அசோகன் உட்பட பலர் நடித்துள்ள படம், ’கடுவா’. தமிழில், ‘வாஞ்சிநாதன்’, ‘ஜனா’, ‘எல்லாம் அவன் செயல்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஷாஜி கைலாஷ் இதை இயக்கியுள்ளார். படத்தை பிருத்விராஜ் புரொடக்‌ஷனும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் லிஸ்டின் ஸ்டீபனும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படம் பான் இந்தியா முறையில், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

படம் பற்றி சென்னையில் நடிகர் பிருத்விராஜ் கூறுகையில், ``தமிழில் குறைவான படங்கள்தான் நடித்திருக்கிறேன். அந்தப் படங்கள் பற்றி நினைக்கும்போது இனிமையான நினைவுகள் இருக்கிறது. ’மொழி’ மாதிரியான ஒரு படத்தை தமிழ் சினிமாதான் எனக்குக் கொடுத்தது. ஆனாலும் ஏன் தமிழ்ப் படங்களில் தொடர்ந்து் நடிக்கவில்லை என்ற கேள்வி முக்கியமானதுதான்.

காவியத் தலைவன் படத்துக்குப் பிறகு சரியான கதைகள் எனக்கு அமையவில்லை. என்னை சிலிர்க்க வைக்கிற, அல்லது நான் பண்ணாத கேரக்டர்கள் அமையவில்லை. இப்போது சில இயக்குநர்களிடம் கேட்டிருக்கிறேன். விரைவில் அது நடக்கும்.

சமீபகாலமாக மலையாளத்தில் சிறந்த கதைகளைக் கொண்ட படங்கள் வெளிவருகிறது. அதை பெருமையாகச் சொல்வேன். ஆனால், ஒரு ஒரே ஜானர் மட்டும் அங்கு விடுபட்டு விட்டது. அது மாஸ் ஆக்‌ஷன் என்டர்டெயின்மென்ட் படம். ’கடுவா’ அதுமாதிரியான ஒரு படம். ரொம்ப நாட்களாக மலையாளத்தில் நான் பண்ண முடியாத, பண்ணாத படம். கண்டிப்பாக ரசிகர்களுக்கு இது பிடிக்கும். மலையாள சினிமாவில் இனிமேல் உருவாகும் அனைத்து பெரிய படங்களும் பான் இந்தியா படங்களாகத்தான் வெளிவரும்'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in