'என் இதயத்தின் இளவரசிக்கு பிறந்தநாள்': 36 வயதான நடிகைக்கு வாழ்த்துச் சொன்ன நடிகர் சித்தார்த்

'என் இதயத்தின் இளவரசிக்கு பிறந்தநாள்': 36 வயதான நடிகைக்கு வாழ்த்துச் சொன்ன நடிகர் சித்தார்த்

நடிகர் சித்தார்த் ‘என் இதயத்தின் இளவரசி’ என அதிதிக்கு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி இருவரும் காதலித்து வருகிறார்கள் என்ற செய்தி வெளியான நிலையில் நடிகர் சித்தார்த், அதிதியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி இருவரும் இருக்கும்படியான புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘’என் இதயத்தின் இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உன்னுடைய மிகப் பெரிய, மிகச்சிறிய, இதுவரை நான் பார்க்காத கனவுகள் அனைத்தும் நிறைவேற வேண்டும்.

உனக்கு சிறந்தது அனைத்தும் கிடைக்க என்னுடைய வாழ்த்துகள்" என தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகை அதிதி நேற்று தன்னுடைய 36-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். மும்பையில் இருவரும் டேட் செய்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகளின் ரிசப்ஷன் மேலும் சில பொதுநிகழ்ச்சிகளுக்கு இருவரும் ஒன்றாக சேர்ந்து வருவது என சித்தார்த்- அதிதி இருந்தார்கள்.

மேலும் இவர்கள் இருவரும் இணைந்து ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் நடித்த போது காதல் மலர்ந்ததாகவும் செய்தி வந்தது. இன்னும் இருவரும் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் தங்களைப் பற்றி வந்த வதந்திகளையும் இருவரும் மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in