சர்தாருடன் மோதும் ப்ரின்ஸ்: எப்போது இசை வெளியீடு?

சர்தாருடன் மோதும் ப்ரின்ஸ்: எப்போது இசை வெளியீடு?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ப்ரின்ஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் நிலையில், சிவகார்த்திகேயனின் ‘ப்ரின்ஸ்’ திரைப்படமும் அதே நாளில் வெளியாகிறது. தீபாவளி தினத்தில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிவகார்த்திகேயன் டூரிஸ் கைடாக நடிக்கிறார் எனவும் முன்பு தகவல் வெளியானது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளன. தமிழ் - தெலுங்கு என பைலிங்குவல் படமாக உருவாகிவரும் ’ப்ரின்ஸ்’ படத்தை இயக்குநர் அனுதீப் இயக்கி இருக்கிறார். தமன் இசையமைத்துள்ளார். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

படத்தில் கதாநாயகியாக மரியா நடிக்கிறார். படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிரது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 9-ம் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது.

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தின் டீஸர் ஆயுத பூஜை விடுமுறை நாட்களை ஒட்டி வெளியாகும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in