லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் மோடி, சச்சின் அஞ்சலி

லதா மங்கேஷ்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய  பிரதமர் மோடி
லதா மங்கேஷ்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடிANI

மும்பை சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் மோடி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் உடல், ராணுவ வாகனத்தில் வைத்து இறுதி சடங்கிற்காக சிவாஜி பார்க் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம், மும்பை பிரபுகஞ்சில் இருந்து தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

லதா மங்கேஷ்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி
லதா மங்கேஷ்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி ANI

இந்நிலையில், மும்பை சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் மோடி இறுதி அஞ்சலி செலுத்தினார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, முன்னாள் கிரிக்கெட் சாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறினார்.

இறுதி அஞ்சலி நிகழ்வில் முதல்வர் உத்தவ் தாக்கரே , சரத் பவார், சச்சின், ஷாருக்கான் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in