சிவகார்த்திகேயனுக்கு வில்லன் இவர்தானா?

சிவகார்த்திகேயனுக்கு வில்லன் இவர்தானா?

காமெடி நடிகர் பிரேம்ஜி அமரன், சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதை, தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் எடுத்து வருகின்றனர். ‘டான்’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கி வருகிறார்.

பிரேம்ஜி அமரன், சிவகார்த்திகேயன்
பிரேம்ஜி அமரன், சிவகார்த்திகேயன்

இதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக் ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. தமன் இசை அமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சிவகார்த்திகேயனின் 20-வது படமான இதில், அவருக்கு இரண்டு ஹீரோயின். ஒருவர் ராஷி கண்ணா, மற்றொருவர் வெளிநாட்டு நடிகை. சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் காரைக்குடியில் தொடங்கியது.

இந்நிலையில் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரேம்ஜி அமரன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதைப் படக்குழு உறுதிப்படுத்தவில்லை.

இதற்கிடையே சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’டான்’ படம், மே 13-ம் தேதி வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.