பிக் பாஸ் இல்லத்திற்குள் பிரக்னென்சி டெஸ்ட்... அதிர்ச்சி கொடுத்த போட்டியாளர்!

பிக் பாஸ்...
பிக் பாஸ்...
Updated on
2 min read

பிக் பாஸ் இல்லத்தில் தான் பிரக்னென்சி டெஸ்ட் எடுத்ததாகப் போட்டியாளர் ஒருவர் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

அங்கிதா லோகாண்டே
அங்கிதா லோகாண்டே

உலகப்புகழ் பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாது, இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழில் கமல்ஹாசனும், தெலுங்கில் நாக சைதன்யாவும் தொகுத்து வழங்க, இந்தியில் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்தி பிக் பாஸின் பதினேழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில்தான் பெண் போட்டியாளர் ஒருவர் தான் பிரக்னென்சி டெஸ்ட் எடுத்துள்ளதாகப் பேசியுள்ள விஷயம் வைரலாகி வருகிறது.

அங்கிதா லோகாண்டே
அங்கிதா லோகாண்டே

‘பிக் பாஸ் 17’ வீட்டில் அங்கிதா லோகண்டே மற்றும் விக்கி ஜெயின் இருவரும் வீட்டிற்குள் டாம் அண்ட் ஜெர்ரி போல சண்டைப் போட்டுக் கொண்டாலும் அவர்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. இந்த நிலையில், முந்தைய எபிசோடில் வீட்டிற்குள் விக்கியுடன் பேசிக் கொண்டிருக்கும் போது தான் இதற்கு முன்பு கர்ப்ப பரிசோதனை செய்ததாகவும், இப்போது தனது வழக்கமான மாதவிடாய்யை தவற விட்டிருப்பதாகவும் அங்கிதா கூறியுள்ளார்.

அங்கிதா லோகாண்டே
அங்கிதா லோகாண்டே

அங்கிதா லோகாண்டே மற்றும் விக்கி ஜெயின் இருவரும் கார்டன் ஏரியாவில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த போது, அங்கிதா தனது திருமண வாழ்க்கைக் குறித்தும் தனது கணவர் தன்னிடம் நடந்து கொண்ட கசப்பான அனுபவங்கள் குறித்தும் விக்கியிடம் பகிர்ந்து கொண்டார். தனது கணவருடன் அடிக்கடி நடக்கும் சண்டைகளால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், தற்போது மனதளவில் சோர்வாக இருப்பதாகவும் கூறினார்.

கர்ப்பமாக இருக்கிறேனா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் எடுத்ததாகவும் இப்போது குழப்பத்தில் இருக்கிறேன் எனவும் அவர் பேசியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Nayanthara | சின்னத்திரை தொகுப்பாளர் டூ லேடி சூப்பர் ஸ்டார்! டயானா... நயன்தாராவாக மாறிய கதை!

சோகம்… பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்!

அதிர்ச்சி… 28 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு!

இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம்... கையோட ஆதார் எடுத்துட்டு போங்க!

குட்நியூஸ்... எஸ்பிஐ வங்கியில் 8,283 காலிப்பணியிடங்கள்; உடனே விண்ணப்பியுங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in