வைரலாகும் மரணம் பற்றிய பிரதாப் போத்தனின் கடைசி பதிவு!

வைரலாகும் மரணம் பற்றிய பிரதாப் போத்தனின் கடைசி பதிவு!

மறைந்த இயக்குநரும் நடிகருமான பிரதாப் போத்தனின் கடைசி பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகர் பிரதாப் போத்தன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ள பிரதாப் போத்தன், தமிழில் பாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து இளமை கோலம், மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தைக் கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், புதுமைப்பெண், சிந்து பைரவி, ஆயிரத்தில் ஒருவன் உட்பட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

கடைசியாக ’பரோஸ்’ என்ற மலையாளப் படத்தில் மோகன் லாலுடன் நடித்திருந்தார். இந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றி விழா, மைடியர் மார்த்தாண்டன், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி உட்பட 12 படங்களை இயக்கியுள்ளார்.

சென்னையில் வசித்து வந்த பிரதாப் போத்தன், இன்று காலை காலமானார். இது திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் பாரதிராஜா, ’’பிரதாப் போத்தன் மறைவு செய்தி வேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்’’ என்று தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரதாப் போத்தன் கடைசியாக, மரணம் பற்றிய பதிவு ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், ஜார்ஜ் கார்லின் என்பவரை மேற்கோள் காட்டி, ‘’உமிழ்நீரை நீண்ட காலமாக விழுங்குவதால் மரணம் ஏற்படுகிறது’ என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in