பிரபாஸ் நடிக்கும் `சலார்’ ரீமேக் கதையா?

பிரபாஸ் நடிக்கும் `சலார்’ ரீமேக் கதையா?

``பிரபாஸ் நடிக்கும் `சலார்’ படம் ரீமேக் கதையை கொண்டது அல்ல'' என்று அதன் இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார்.

கே.ஜி.எப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல், அந்தப் படத்தின், 2-ம் பாகத்தை கே.ஜி.எப் சாப்டர் 2 என்ற பெயரில் இயக்கியுள்ளார். யஷ், சஞ்சய் தத், ரவீணா டாண்டன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் வரும் 14-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளதால், ஆர்ஆர்ஆர் படத்தைவிட அதிக திரையரங்குகளில் வெளியிட உள்ளனர்.

இதை அடுத்து பிரசாந்த் நீல் இயக்கும் படம், `சலார்’. இதில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் ஹீரோயின். ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், மது குருசாமி உட்பட பலர் நடிக்கின்றனர். அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் உருவாகிறது.

பிரசாந்த் நீல்
பிரசாந்த் நீல்

இந்தப் படம் கே.ஜி.எஃப் பட வரிசையின் அடுத்தப் பாகம் என்றும், பிரசாந்த் நீல் கன்னடத்தில் இயக்குநராக அறிமுகமான `உக்ரம்' படத்தின் ரீமேக் என்றும் கூறப்பட்டது. சமூக வலைதளங்களில் இதுபற்றி எழுதி வந்தனர். இந்நிலையில், இந்த தகவலை இயக்குநர் பிரசாந்த் நீல் மறுத்துள்ளார்.

அவர் கூறும்போது, ``நான் இயக்கும் படங்களில் `உக்ரம்' படத்தில் சாயல்கள் கொஞ்சம் இருக்கும். அது என் ஸ்டைல். ஆனால், `சலார்' புதிய கதை. அது `உக்ரம்' படத்தின் ரீமேக் அல்ல’' என்று தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் 30 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in