பிரபல நடிகைக்கு பெண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து!

பிரபல நடிகைக்கு பெண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து!

பிரபல நடிகைக்கு பெண் குழந்தைப் பிறந்ததை அடுத்து ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அருள்நிதி நடித்த உதயன், கார்த்தி நடித்த 'சகுனி', சூர்யா நடித்த 'மாசு என்ற மாசிலாமணி', 'எனக்கு வாய்த்த அடிமைகள்' உட்பட சில படங்களில் நடித்தவர் பிரணிதா சுபாஷ். கன்னட நடிகையான இவர், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர், கடந்த ஆண்டு நிதின் ராஜு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் .

தனது கணவரின் 34-வது பிறந்த நாளின் போது தான் தாய்மை அடைந்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு அழகான பெண்குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்துடன் இதை, தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ள பிரணிதா, மருத்துவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.

’மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜெயஸ்ரீ, டாக்டர் சுனில் ஈஸ்வர் மற்றும் அவர் குழுவினரால் எனது பிரசவம் சீராக இருந்தது. முடிந்தவரை என் பிரசவ வலியைக் குறைத்த டாக்டர் சுப்பு, மற்றும் மயக்க மருந்து நிபுணர் உள்பட மருத்துவ குழுவினருக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in