நடிகை பிரணிதாவுக்கு கோல்டன் விசா

நடிகை பிரணிதாவுக்கு கோல்டன் விசா

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா, நடிகை பிரணிதா சுபாஷுக்கும் வழங்கப்பட்டுள்ளது

ஐக்கிய அரபு அமீரக அரசு இந்திய நடிகர், நடிகைகளுக்கு தொடர்ந்து கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. இந்த விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரக குடிமகன்களாகக் கருதப்படுவார்கள். இந்தி நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், இந்தி நடிகை ஊர்வசி ரவுதலா, மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், ஆர்.பார்த்திபன் உட்பட பலருக்கு இந்த விசா வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை பிரணிதாவுக்கும் இந்த விசா வழங்கப்பட்டுள்ளது. இதை, தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

'உதயன்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் கன்னட நடிகை பிரணிதா. கார்த்தியின் ’சகுனி’, சூர்யாவின்’ மாஸ் என்கிற மாசிலாமணி’ எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் இவர், பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் நிதின் ராஜுவை திடீர் திருமணம் செய்துகொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in