3 மொழிகளில் தயாராகும் ‘மாஃபியா’

3 மொழிகளில் தயாராகும் ‘மாஃபியா’

ஆக்‌ஷன் திரைப்படங்களில் அலுக்காத மாஃபியா கதையை, அதே தலைப்பில் மும்மொழி திரைப்படமாக உருவாக்கி வருகிறது, கன்னட பின்னணியிலான திரைப்படக் குழு.

பிரதான இந்திய மொழிகளில் வெளியாகும் முன்னணி திரைப்படங்களை கர்நாடகாவில் விநியோகம் செய்து வருபவர் பி.குமார். பல்வேறு திரைப்படங்களையும் தயாரித்து வரும் இவர், தமிழ் உட்பட 3 மொழிகளில் மாஃபியா திரைப்படத்தை தயாரித்து வருகிறார். பி.குமார் நேரடியாக தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படமாகவும் மாஃபியா அமைந்துள்ளது.

மாஃபியாவை ஹெச்.லோகித் என்பவர் இயக்கியுள்ளார். கன்னடத்தில் வெற்றிகரமாக வெளியாகி, தமிழிலும் மொழி மாற்றமான ’மம்மி’ மற்றும் ’தேவகி’ என 2 படங்களை இவர் ஏற்கனவே இயக்கி உள்ளார். இந்த வகையில் இயக்குநருக்கு இது மூன்றாவது திரைப்படம் ஆகும்.

மாஃபியா திரைப்படத்தின் நாயகனாக, கன்னடத்தில் பிரபலமான பிரஜ்வால் தேவ்ராஜ் என்பவர் நடித்துள்ளார். மாஃபியா திரைப்படத்தின் கதை முழுக்க ஆக்‌ஷன் அடிப்படையில் அமைந்தபோதும், இதுவரை வெளியாகாத வித்தியாசமான மாஃபியாவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் என்கிறார்கள். ஆக்‌ஷன் விறுவிறுப்போடு, அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கில் மாஃபியா அமைந்திருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

பிரஜ்வால் தேவராஜுடன் அதிதி பிரபுதேவா, ஷைனி ஷெட்டி, வாசுகி வைபவ் உள்ளிட்ட பலர் மாஃபியாவில் நடித்துள்ளனர். திரைப்படத்தின் முதல் பார்வை யூட்யூபில் அண்மையில் வெளியாகி பரவலான வரவேற்பினை பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in