மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகர் மரணம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகர் மரணம்

உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் மரணமடைந்தார்.

பிரபல வங்க மொழி நடிகர் பிரதீப் முகர்ஜி. சத்யஜித் ரேயின் ’ஜன ஆரண்யா’ படத்தில் நாயகனாக நடித்தவர் இவர். புத்ததேவ் தாஸ்குப்தாவின் ‘தூரத்வ்கா’, ரிதுபர்னகோஷின் ‘உட்ஷாப்’ உட்பட சுமார் 40 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘டோருலாடர் பூட்’ என்ற த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார்.

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உடல் நிலை மோசமானதை அடுத்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 72. மறைந்த பிரதீப் முகர்ஜிக்கு மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பலர் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in