ரஜினிகாந்தை இயக்கும் பிரதீப் ரங்கநாதன்?

ரஜினிகாந்தை இயக்கும் பிரதீப் ரங்கநாதன்?

சிபி சக்ரவர்த்திக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் நடிகர் ரஜினிகாந்த்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகத் தெரிகிறது.

‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தற்போது ‘லவ் டுடே’ படம் மூலமாக கோலிவுட்டின் ஹிட் இயக்குநராகி இருக்கிறார். இவரது படத்தையும் நடிப்பையும் பார்த்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டப் பல பிரபலங்கள் நேரில் அழைத்துப் பாராட்டினர்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து எந்த இயக்குநருடைய படத்தில் ரஜினி நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கிறது. இந்த பட்டியலில் இடம்பெற்ற பல இயக்குநர்களது பெயரில் ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி பெயரும் ஒன்று.

லைகா தயாரிப்பில், சிபி சக்ரவர்த்தி ரஜினியை இயக்க கதை சொல்லி இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால், அந்த கதை ரஜினியை திருப்திப்படுத்தவில்லை எனவும், அதற்கு பதிலாக அவர் ‘லவ் டுடே’ இயக்குநர் பிரதீப் ரங்கநாதனிடம் கதை கேட்டிருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. ’நடிகர் ரஜினியின் 171-வது படத்தை எப்போது இயக்குவீர்கள்? கதை சொல்லி இருக்கிறீர்களா?’ என்று கேட்டு, ரசிகர் ஒருவர் செய்திருக்கும் ட்விட்டையும் பிரதீப் ட்விட்டர் பக்கத்தில் லைக் செய்திருக்கிறார். தகவல் உறுதியானால் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in