பிரபு சாலமன் இயக்கத்தில் ஹீரோயின் இல்லாத படம்

பிரபு சாலமன் இயக்கத்தில் ஹீரோயின் இல்லாத படம்

இயக்குநர் பிரபு சாலமன் ஹீரோயின் இல்லாத படத்தை இயக்கி வருகிறார்.

கொக்கி, மைனா, கும்கி, கயல் படங்களை இயக்கிய பிரபு சாலமன், கடைசியாக ’காடன்’ படத்தை இயக்கி இருந்தார். இதில் ராணா, விஷ்ணு விஷால் உட்பட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவான இந்தப் படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருந்தது.

அஸ்வின் குமார்
அஸ்வின் குமார்

கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை அடுத்து அவர், 'கும்கி 2' படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதில், குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் குமார் நாயகனாக நடிக்கிறார். பயணம் பற்றிய கதையை கொண்ட இந்தப் படத்தில் ஹீரோயின் இல்லை என்றும் கொடைக்கானல் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வழக்கமாக, தனது படங்களில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரபு சாலமன், இந்தப் படத்தை நாயகி இல்லாமல் இயக்கி வருகிறார்.

Related Stories

No stories found.