பிரபுதேவாவின் புதிய காதலியா?

வைரல் வீடியோவால் ரசிகர்கள் கேள்வி
பிரபுதேவாவின் புதிய காதலியா?
பிரபுதேவா

தமிழ் சினிமாவின் 'மைக்கேல் ஜாக்சன்' என புகழப்படும் நடிகர் பிரபுதேவா, பல்வேறு மொழிப்படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார். அத்துடன் தமிழ் மட்டுமின்றி இந்தியில் பிரபல இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார். தமிழ் படங்களில் கதாநாயகனாக தொடர்ந்து நடித்தும் வருகிறார். அவர் நடித்த 'பஹிரா' தமிழ்த் திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது.

இந்நிலையில் இளம்பெண் ஒருவருடன் பிரபுதேவா சுற்றுவது போன்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அவர் தான் பிரபுதேவாவின் புதிய காதலியா? என்று கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து விசாரித்தபோது, ``படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான வீடியோ அது. பிரபுதேவாவுடன் இருப்பவர் நடிகை மாதுரி'' என்றனர். 1995-ம் ஆண்டு ரமலத் என்ற நடனக்கலைஞரை பிரபுதேவா திருமணம் செய்தார். 2011-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து மூலம் பிரிந்தனர். இந்நிலையில் மும்பை மருத்துவரை பிரபுதேவா காதலித்து வருவதாக செய்திகள் சுற்றி வருகின்றன. அதே நேரத்தில் இவரை பிரபுதேவா திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in