
நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கும் படத்தில், பிரபுதேவா பணியாற்றுகிறார்.
மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ’லூசிஃபர்’. இந்தப் படம் தெலுங்கில் ’காட்ஃபாதர்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதை மோகன் ராஜா இயக்குகிறார். நயன்தாரா, இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகர் சத்யதேவ் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.
இதில், இந்தி நடிகர் சல்மான் கான் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அவர் தொடர்பான காட்சிகள் மும்பையில் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்தப் படத்துக்கு அவர் சம்பளம் வாங்கவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில், சிரஞ்சீவியுடன் அவர் ஆடும், பாடல் காட்சி ஒன்று படமாக்கப்படுகிறது.
இந்த நடனத்தை ’நடனப்புயல்’ பிரபுதேவா அமைக்க இருக்கிறார். இந்தப் பாடல் காட்சிப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.