பிரபுதேவா நடன அமைப்பில் சல்மான் கானுடன் ஆடும் மெகா ஸ்டார்!

பிரபுதேவா நடன அமைப்பில் சல்மான் கானுடன் ஆடும் மெகா ஸ்டார்!

நடிகர் சல்மான் கானுடன் சிரஞ்சீவி ஆடும் நடனக் காட்சியை பிரபுதேவா அமைக்கிறார்.

மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ’லூசிஃபர்’. இதில் இந்தி நடிகர் விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன் உட்பட பலர் நடித்திருந்தனர். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் தெலுங்கில் ‘காட்ஃபாதர்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதை மோகன்ராஜா இயக்குகிறார். கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து படத்தைத் தயாரித்து வருகிறது.

மோகன் ராஜா, பிரபுதேவா
மோகன் ராஜா, பிரபுதேவா

மோகன்லால் நடித்த கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்கிறார். மஞ்சு வாரியர் நடித்த கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். ’தனி ஒருவன்’, ’வேலைக்காரன்’ படங்களுக்குப் பிறகு மோகன்ராஜா இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் மூன்றாவது படம் இது. கிளைமாக்ஸில் இடம் பெறும் முக்கிய காட்சியில் சல்மான் கான் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு அவர் சம்பளம் வாங்காமல் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே இருவரும் ஆடும் பாடல் காட்சி ஒன்றும் இடம்பெறுகிறது. இந்தக் காட்சியின் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. இந்த நடனத்தை பிரபுதேவா அமைக்கிறார். இந்தப் புகைப்படத்தை நடிகர் சிரஞ்சீவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘இந்தக் காட்சி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்’ என்று தெரிவித்துள்ளார். இயக்குநர் மோகன் ராஜா, படப்பிடிப்பில் பிரபுதேவாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in