‘டிங் டாங்’ பர்ஸ்ட் லுக்: பிரபுதேவா வெளியீடு

‘டிங் டாங்’ பட தொடக்க விழாவில் ராபர்ட்
‘டிங் டாங்’ பட தொடக்க விழாவில் ராபர்ட்

‘டிங் டாங்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, பிரபுதேவா சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

நடன இயக்குநர் ராபர்ட் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அவர் நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் படம், 'டிங் டாங்'. இதை நடன இயக்குநரும் அவர் சகோதரருமான ஜே.எம். இயக்குகிறார். வி ஆல் புரொடக்‌ஷன்ஸ், ஆர் ஆர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். விஜய் வல்சன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சஸ்பென்ஸ் திரில்லர் படமான இதில் 4 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் தொடக்கவிழா சென்னையில் இன்று நடைபெற்றது. படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக்கை நடன இயக்குநர் பிரபுதேவா இன்று வெளியிட்டார்.

பர்ஸ்ட் லுக்
பர்ஸ்ட் லுக்

இதுகுறித்து இயக்குநர் ஜே.எம் கூறும்போது, “நான் ஏற்கெனவே 'ஒண்டிக்கு ஒண்டி' என்ற படத்தை இயக்கி இருக்கிறேன். 2-வது படமாக இதை இயக்குகிறேன். டிங் டாங் என்றால் கடிகாரம் என்பது நினைவில் வரும். இப்படத்தின் கதையும் காலத்தை மையமாக வைத்து உருவாகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in