வடிவேலு & பிரபுதேவா
வடிவேலு & பிரபுதேவாவடிவேலுவுடன் மீண்டும் நடிக்க விருப்பம்; விரைவில் அது நடக்கும்: பிரபுதேவா

வடிவேலுவுடன் மீண்டும் நடிக்க விருப்பம்; விரைவில் அது நடக்கும்: பிரபுதேவா

நடிகர் பிரபுதேவா வடிவேலுவுடன் மீண்டும் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா, காயத்ரி, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடியத் திரைப்படம் ‘பகிரா’. இந்தவார இறுதியில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. படம் தொடர்பாக நடிகர் பிரபுதேவா ஊடகங்களுக்கு கொடுத்துள்ள பேட்டியில், நடிகர் வடிவேலுவுடன் மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 90’களில் நடிகர் பிரபுதேவா நடிகராக பிஸியாக இருந்தபோது, வடிவேலு-பிரபுதேவா இணையும் அவர்களது நகைச்சுவைக் காட்சிகளுக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.

அந்தவகையில், இந்த இணை மீண்டும் திரையில் பார்க்க முடியுமா என கேட்கப்பட்டது. ‘வடிவேலுவுடன் இப்போதுவரை நல்ல நட்புத் தொடர்கிறது. அவருடன் மீண்டும் இணைந்து நடிக்க விருப்பம் உள்ளது. விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன்’ எனக்கூறியுள்ளார். வடிவேலுவின் கம்பேக் படமான ’நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் அவருக்காக புரோமோஷனல் பாடல் ஒன்றை பிரபுதேவா நடனம் அமைத்து சிறப்புத் தோற்றத்தில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in