பிரபுதேவாவுடன் இணைகிறார் லால்!

பிரபுதேவா
பிரபுதேவா

பிரபுதேவாவுடன் பிரபல மலையாள நடிகர் லால் இணையும் படத்தை, ஆர்.எஸ்.விமல் இயக்குகிறார்.

பிருத்விராஜ், பார்வதி, டோவினோ தாமஸ், பாலா உட்பட பலர் நடித்து 2015-ம் ஆண்டு வெளியான படம், ’என்னு நின்டே மொய்தீன்’. மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படத்தை ஆர்.எஸ்.விமல் இயக்கி இருந்தார். இந்தப் படத்துக்கு பல்வேறு விருதுகள் கிடைத்தன.

 லால்
லால்

இதையடுத்து ஆர்.எஸ்.விமல், பிரம்மாண்ட பட்ஜெட்டில் ’கர்ணன்’ கதையைப் படமாக்க இருப்பதாக அறிவித்தார். பான் இந்தியா படமாக அதை உருவாக்க இருப்பதாகவும் துபாயில் நடந்த விழாவில் அறிவித்தார். படத்துக்கு இயக்குநர் ராஜமெளலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய இருந்தார். அதற்கான வேலைகள் நடந்து வந்த நிலையில், அந்தப் படம் என்ன ஆனது என்று தெரியவில்லை.

இந்நிலையில், அவர் தமிழ்ப் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். அதில் பிரபுதேவாவும் லாலும் இணைந்து நடிக்க இருக்கின்றனர். இதன் ஷூட்டிங் முழுவதும் இங்கிலாந்தில் நடக்க இருக்கிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in