2 பாகங்களாக உருவாகிறது பிரபாஸின் ’சலார்’

நடிகர்பிரபாஸ்
நடிகர்பிரபாஸ்

பிரபாஸ் நடிக்கும் ’சலார்’ படம், 2 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல், அந்தப் படத்தின், 2-ம் பாகத்தை இப்போது இயக்கியுள்ளார். யாஷ், சஞ்சய் தத், ரவீணா டாண்டன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதை அடுத்து பிரசாந்த் நீல் இயக்கும் படம், ’சலார்’.

இதில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், மது குருசாமி உட்பட பலர் நடிக்கின்றனர். அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் உருவாகிறது.

பிரபாஸ்
பிரபாஸ்

இந்தப் படம் அடுத்த வருடம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படமும் 2 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுறது. ஏற்கெனவே ’பாகுபலி’, ’கே.ஜி.எப்’, ’புஷ்பா’ படங்கள் 2 பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், ’சலார்’ படமும் 2 பாகங்களாக உருவாகிறது என்கிறார்கள்.

நடிகர் பிரபாஸ், இப்போது ராதே ஷ்யாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது. இதையடுத்து அவர் நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in