'தல', 'தளபதி' படங்கள் வருகையால் தள்ளிப்போகும் 'ஆதி புருஷ்'

'தல', 'தளபதி' படங்கள் வருகையால்  தள்ளிப்போகும் 'ஆதி புருஷ்'

நடிகர் விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' படங்கள் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக உள்ளதால் 'ஆதி புருஷ்' படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓம் ரனாவத் இயக்கத்தில் ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் 'ஆதி புருஷ்'. இப்படத்தின் கதாநாயகனாக 'பாகுபலி' ஹீரோ பிரபாஸ், கதாநாயகியாக பாலிவுட் நடிகை கிருதி சனோன் நடித்துள்ளனர். சைஃப் அலிகான் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. மோசமான கிராஃபிக்ஸ் காட்சிகள் என கடுமையான விமர்சனங்களை 'ஆதி புருஷ்' பெற்றது. இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், டீசர் வெளியீடால் கிடைத்த எதிர்விமர்சனத்தால் 'ஆதி புருஷ்' அடுத்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளைச் சரி செய்ய வேண்டும் என்பதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், 'ஆதி புருஷ்' வெளியாகவிருந்த பொங்கல் பண்டிகையன்று நடிகர் விஜய்யின் 'வாரிசு', நடிகர் அஜித்தின் 'துணிவு' ஆகிய படங்கள் வெளியாகின்றன. இதன் காரணமாக 'ஆதி புருஷ்' வசூல் பெருமளவு பாதிக்கப்படும் என்பதால் அதன் வெளியீட்டை படக்குழு தள்ளி வைத்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in