கையில் வில்லேந்தி ஆர்ப்பரித்த பிரபாஸ்: டெல்லி தசரா விழாவில் ஆரவாரம்!

கையில் வில்லேந்தி ஆர்ப்பரித்த பிரபாஸ்: டெல்லி தசரா விழாவில் ஆரவாரம்!

பிரபாஸ் தற்போது உருவாகி வரும் ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமராக நடிக்கிறார். இந்த நிலையில் தசரா பண்டிகையான நேற்று டெல்லியின் லவ் குஷ் ராம்லீலாவில் நடந்த ராவண தகனம் நிகழ்ச்சியில் பிரபாஸ் பங்கேற்றார்.

பிரபாஸ் மற்றும் சைஃப் அலி கான் நடிப்பில், ஓம் ராவத்தின் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் உருவாகி வருகிறது. அக்டோபர் 2ம் தேதி வெளியான இப்படத்தின் டீசர், அதன் மோசமான VFX க்காக பெரிதும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தவறான கருத்துக்களுக்காகவும் ‘ஆதிபுருஷ்’ படத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர். எனவே #BoycottAdipurush என்ற ஹேஷ்டேக்கும் சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தது. ராமாயணத்தின் 3டி தழுவலான ‘ஆதிபுருஷ்’ ஜனவரி 12, 2023 அன்று பல மொழிகளில் திரையரங்குகளில் வரவுள்ளது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. ராமாயண இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் பிரபாஸ் ராமராக நடிக்கிறார்.

இந்த நிலையில் நேற்று டெல்லி லவ்குஷ் ராம்லீலாவில் நடந்த தசரா விழாவில் நடிகர் பிரபாஸ் ராவண தகனம் செய்தார். இந்த விழா ஆண்டுதோறும் டெல்லி செங்கோட்டை மைதானத்தில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தசரா அன்று, லவ் குஷ் ராம்லீலா ராவண தகனம் செய்ய ஒரு முக்கிய நபரை அழைக்கிறது. இந்த ஆண்டு பிரபாஸுக்கு அந்த மரியாதை கிடைத்தது. லவ் குஷ் ராம்லீலாவில் நடிகர் பிரபாஸ், இயக்குநர் ஓம் ராவத் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கலந்துகொண்டனர். பிரபாஸ் வில் மற்றும் கடம் ஏந்தி ஆர்ப்பரித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in