உடல் எடை குறைப்பு.. வித்தியாசமான கெட்அப்: `சலார்’ படத்தில் 2 வேடத்தில் கலக்கப்போகும் பிரபாஸ்

உடல் எடை குறைப்பு.. வித்தியாசமான கெட்அப்: `சலார்’ படத்தில் 2 வேடத்தில் கலக்கப்போகும் பிரபாஸ்

’சலார்’ படத்தில் நடிகர் பிரபாஸ் இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

கே.ஜி.எஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், அடுத்து இயக்கும் படம் ’சலார்’. இதில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் ஹீரோயின். ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், மது குருசாமி உட்பட பலர் நடிக்கின்றனர். அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் உருவாகிறது.

இந்தப் படத்தில் பிரபாஸ் இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வேடங்களுக்காக பிரபாஸ் அதிரடி வித்தியாசம் காட்ட இருக்கிறார். அண்ணன்- தம்பியாக நடிக்கும் அவர், தம்பி கேரக்டருக்காக உடல் எடையை 20 கிலோ குறைத்துள்ளார்.

வாலி படம் மாதிரி அண்ணன், தம்பிகளுக்குள் நடக்கும் மோதல்தான் படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது. ஆனால், படக்குழு இதை உறுதிப்படுத்தவில்லை. இதில் ஒரு கேரக்டரின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், எடை குறைந்துள்ள தம்பி கேரக்டரின் படப்பிடிப்பு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

நடிகர் பிரபாஸ் ஏற்கெனவே, ‘பாகுபலி’ படத்தில் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in