எனக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை? - பிரபாஸ் ருசீகரம்

எனக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை? - பிரபாஸ் ருசீகரம்
ராதே ஷ்யாம்: பிரபாஸ், பூஜா ஹெக்டே

தனக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை என்பதற்கு நடிகர் பிரபாஸ் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.

‘சாஹோ’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘ராதே ஷ்யாம்’. இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா உட்பட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார்.

70-களின் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வரும் 11-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளார். ஐரோப்பிய பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படம், 70-களில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது.

ராதே ஷ்யாம்: பிரபாஸ், பூஜா ஹெக்டே
ராதே ஷ்யாம்: பிரபாஸ், பூஜா ஹெக்டே

சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் டிரெய்லர் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில் இதன் இந்திப் பதிப்பின் டிரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. அப்போது பிரபாஸிடம் ஒருவர், “காதல் பற்றிய உங்கள் கணிப்புகள் சரியாக இருக்காது என்று டிரெய்லரில் ஒரு டயலாக் வருகிறது. நிஜவாழ்க்கையில் உங்கள் கணிப்பு எப்படி?” என்று கேட்டார்.

அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த பிரபாஸ், “உண்மைதான். என் காதல் கணிப்புகள் எப்போதுமே தவறானவை. அதனால்தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை” என்றார்.

Related Stories

No stories found.