அடுத்தடுத்து சிக்கும் ஹீரோக்கள்: நடிகர் பிரபாஸுக்கும் அபராதம்!

அடுத்தடுத்து சிக்கும் ஹீரோக்கள்: நடிகர் பிரபாஸுக்கும் அபராதம்!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் நகரில் கடந்த சில நாட்களாக கார் கண்ணாடிகளில் ஒட்டியுள்ள கருப்பு ஸ்டிக்கர்களை போக்குவரத்து போலீஸார் சோதனை செய்து அகற்றி வருகின்றனர். சினிமா, அரசியல் பிரபலங்கள் தங்கள் கார்களில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டு செல்கின்றனர். இதனால், போக்குவரத்து போலீஸார் நடத்தும் சோதனையில் சிக்குகின்றனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன், நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜூன், நாக சைதன்யா, மஞ்சு மனோஜ், இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் கார்களில் இருந்த கருப்பு ஸ்டிக்கர்களை அகற்றி தலா 700 ரூபாய் அபராதம் விதித்தனர்.

இந்நிலையில், ஜூப்ளி ஹில்ஸ் போக்குவரத்து போலீஸார் நேற்று நடத்திய சோதனையில், ’பாகுபலி’ நடிகர் பிரபாஸின் கார் சிக்கியது. அவர் காரில் கருப்பு ஸ்டிக்கர் தவிர, நம்பர் பிளேட்டில் 0009 எண்ணுக்குப் பதில், வெறும் 9 எனும் எண் பலகை பொருத்தியிருந்ததால் அவருக்கு ரூ.1,450 அபராதம் விதித்தனர். சோதனையின்போது காரில் பிரபாஸ் இல்லை என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.