ரசிகர்களே ட்ரெய்லரை வெளியிடுவார்கள் : பிரபாஸின் அதிரடி அறிவிப்பு

ரசிகர்களே ட்ரெய்லரை வெளியிடுவார்கள் : பிரபாஸின் அதிரடி அறிவிப்பு

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ்- பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள படம் ‘ராதே ஷ்யாம்’ ஐரோப்பா, இந்தியாவைப் பின்னணியாகக் கொண்ட காதல் கதையாக உருவாகியுள்ள இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி திரையரங்கங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் டிசம்பர் 23-ம் தேதியன்று வெளியிடப்படவுள்ளது. இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெறவுள்ளது. இவ்விழாவின் சிறப்பம்சம் என்னவெனில், இத்திரைப்படத்தின் ட்ரெய்லரை பிரபாஸின் ரசிகர்களே வெளியிடவுள்ளனர். இதற்காக நாட்டின் பல மூலைகளிலிருந்து பிரபாஸின ரசிகர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். இந்திய சினிமா வரலாற்றில் இத்தகைய நிகழ்வு நடைபெறுவது இதுவே முதன்முறை ஆகும். ரசிகர்களுக்கு மதிப்பளிக்கும் பிரபாஸின் இச்செயலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது

Related Stories

No stories found.