`சலார்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: பிரபல ஹீரோவுடன் மோதும் பிரபாஸ்!

`சலார்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: பிரபல ஹீரோவுடன் மோதும் பிரபாஸ்!

பிரபாஸ் நடிக்கும் ’சலார்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

கே.ஜி.எஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், அடுத்து இயக்கும் படம் ’சலார்’. ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். ஸ்ருதி ஹாசன் நாயகி. பிருத்விராஜ், ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி உட்பட பலர் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள மொழிகளில் உருவாகிறது.

கே.ஜி.எஃப் படங்களின் இசை அமைப்பாளர் ரவி பசுர், ஒளிப்பதிவாளர் புவன் கவுடா ஆகியோர் இதிலும் பணிபுரிகின்றனர். இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில், இதன் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. இப்படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் என்பதால், தயாரிப்பாளர்கள், இதற்காக வெளிநாட்டு நிறுவனங்களை வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.

அதிரடி ஆக்சன் மற்றும் சாகசங்கள் நிறைந்த படமான இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தப் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த வருடம் செப்டம்பர் 28-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.

ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன்

இதே தேதியில்தான் ஹிர்த்திக் ரோஷன், தீபிகா படுகோன் நடிக்கும் ’ஃபைட்டர்’ படமும் வெளியாக இருக்கிறது. பிரபாஸ், ஹிர்த்திக் ரோஷன் படத்துடன் மோத இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in