பிரபாஸின் ’ஆதிபுருஷ்’ ரிலீஸ் தேதி மாற்றம்

பிரபாஸின் ’ஆதிபுருஷ்’ ரிலீஸ் தேதி மாற்றம்

பிரபாஸ் நடிக்கும் ’ஆதிபுருஷ்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

பாகுபலி படம் மூலம் பிரபலமான பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படம் மார்ச் 11ஆம் தேதி வெளியாகிறது. இதையடுத்து அவர் நடித்துள்ள படம், ‘ஆதிபுருஷ்’. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இதை இந்திப் பட இயக்குநர் ஓம் ராவத் இயக்குகிறார்.

ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து தயாராகும் இந்தப் படத்தில் பிரபாஸ், ராமராக நடிக்கிறார். இந்தி நடிகை கீர்த்தி சனான் சீதையாகவும் ராவணனாக பிரபல பாலிவுட் ஹீரோ சைஃப் அலிகானும் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு சச்சட்- பரம்பரா இசை அமைக்கின்றனர்.

கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த வருடம் ஜனவரி மாதம் 12ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in