
ரசிகர்களுக்கு ஆயுதபூஜை வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ’லப்பர் பந்து’ திரைப்படத்தின் இரண்டு போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மண் குமார் தயாரிப்பில் உருவாகும் படம், ‘லப்பர் பந்து’. ஹரிஷ் கல்யாண், ‘அட்டகத்தி’ தினேஷ் நாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நாயகிகளாக நடிக்கிறார்கள். காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார்.
ஹரிஸ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்துள்ளதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ஆயுத பூஜையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.