வீடியோ கேம் வடிவெடுக்கும் பிரபல வெப்தொடர்கள்... நெட்ஃபிளிக்ஸ் அதிரடி!

நெட்ஃபிளிக்ஸ்
நெட்ஃபிளிக்ஸ்

பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் தனது பிரபல வெப்தொடர்களை வீடியோ கேம்களாக மாற்றி, பார்வையாளர்களை பரவசப்படுத்த காத்திருக்கிறது.

திரைப்படமோ, வலைத்தொடரோ காணும் காட்சியில் பார்வையாளர் ஒன்றிப்போகும் போது, அது ரசிக்கத்தக்க படைப்பாக வெற்றி பெறுகிறது. அதிலும் அந்த கதையில் அல்லது காட்சியில் தன்னையும் ஒரு அங்கமாக பார்வையாளர் உணரத்தலைப்படும்போது, அந்த படைப்பு ரசிகரால் மறக்க முடியாததாகிறது. இதே உணர்வை வீடியோ கேமில் கடத்தும் உத்தியை தற்போது நெட்ஃபிளிக்ஸ் பரிசீலித்திருக்கிறது.

நெட்ஃபிளிக்ஸ்
நெட்ஃபிளிக்ஸ்

சர்வதேச அளவில் முன்னணி ஓடிடி தளமாக நெட்ஃபிளிக்ஸ் விளங்குகிறது. ஆனபோதும் எண்ணிக்கையில் அதிகரிக்கும் பிராந்திய ஓடிடி தளங்களின் போட்டியை சமாளிக்கத் தடுமாறுகிறது. எனவே தனது சந்தாதாரர்களை தக்கவைத்துக்கொள்ள, ஓடிடி தளத்தில் வீடியோ கேம்களை சேர்த்தது. ஆனால் நெட்ஃபிளிக்ஸின் சுமார் 24 கோடி சந்தாதாரர்களில் சுமார் 1 சதவீதம் கூட வீடியோ கேம் விளையாடுவதில்லை என தெரிய வந்ததும் சோர்ந்தது.

பின்னர் தீர யோசித்து வீடியோ கேமில் வித்தியாசமான திட்டத்தோடு மீண்டும் களமிறங்குகிறது. இதன்படி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற வெப்தொடர்களை, இனி வீடியோ கேம் ஆகவும் விளையாடலாம். இந்த விளையாட்டுகளில் பார்வையாளரும் பங்கேற்பாளராக முடியும் என்பதால், தங்களுக்குப் பிடித்த வெப்தொடரில் தானும் ஒரு பாத்திரமாவதை ரசிகர்கள் வெகுவாய் விரும்புவார்கள் என நெட்ஃபிளிக்ஸ் கணித்துள்ளது.

நெட்ஃபிளிக்ஸ்
நெட்ஃபிளிக்ஸ்

இதன்படி, நார்கோஸ், ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ், வைகிங்ஸ், லவ் ஈஸ் பிளைண்ட் உள்ளிட்டவற்றை வீடியோ கேம் வடிவில் மாற்றி வருகிறது. மேலும் ரசிகர்களின் பெருவிருப்பத்துக்கு உரிய ஸ்க்விட் கேம், வெட்னெஸ் டே, எக்ஸ்ட்ராக்சன், ஷெர்லாக் ஹோல்ம்ஸ், பிளாக் மிரர் போன்ற தொடர்களையும் வீடியோ கேம் ஆக்க நெட்ஃபிளிக்ஸ் திட்டம் வைத்திருக்கிறது. இந்த வீடியோ கேம்கள், வலைத்தொடரின் கதையை அப்படியே கொண்டிராது அவற்றின் ஸ்பின் ஆஃப் வடிவத்தில் வெளியாகும் என்பதால், மற்றுமொரு சீஸனுக்கு இணையான அனுபவத்தையும் ரசிகர்கள் உணர வாய்ப்பாகும்.

இதையும் வாசிக்கலாமே...

மைதானத்தில் சுருண்டு விழுந்த பிரபல நட்சத்திர வீரர்... பாதியிலேயே வெளியேறிய சோகம்!

போதையில் போலீஸாரிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்த இளம்பெண்!

கதறியழுத ஹன்சிகா ... நாள் முழுக்க உணவும் இறங்கலை!

பட்டாசு வெடிவிபத்து... உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள் தொடர் போராட்டம்!

குட் நியூஸ்... தமிழகத்தில் நாளை முதல் இந்த சுங்கச்சாவடி மூடப்படுகிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in