தெலுங்கு பிரபல நடிகர் மரணம்: திரைத்துறையினர் அதிர்ச்சி

தெலுங்கு பிரபல நடிகர் மரணம்: திரைத்துறையினர் அதிர்ச்சி

பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 83.

தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும், அரசியல்வாதியுமான 'ரெபெல் ஸ்டார்' கிருஷ்ணம் ராஜூ உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நாளை இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்றும் இன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது மறைவு தெலுங்கு திரைப்படத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் கிருஷ்ணம் ராஜூ மறைவுக்கு திரைப்படத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in